காவிரி-பெண்ணாறு உள்பட 5 நதிகள் இணைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

காவிரி-பெண்ணாறு உள்பட 5 நதிகள் இணைப்பு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
X

அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில், 2022- 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். பல்வேறு அறிவிப்புகளை, அவர் வெளியிட்டு வருகிறார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உரை நிகழ்த்தினார்.இதைத் தொடர்ந்து, 2022- 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார். அவரது பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

  • கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டில் பொருளாதாரம் முன்னேற்றி வருகிறது. தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால், கொரோனா பரவல் குறைந்துள்ளது.
  • ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அடுத்த 25, ஆண்டுகளின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், அதை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.27,சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற முக்கியத்துவம் தரப்படும்.
  • மேக் இன் இந்தியா என்ற சுய சார்பு திட்டத்தின் மூலம் 60, லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • நாடு முழுவதும் 22, ஆயிரம் கி.மீ. நீளத்திற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தில், 400, ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்.
  • உள்ளூர் வணிகம் மேம்பட ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
  • போக்குவாத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படும்
  • நாடு முழுவதும் 25000,கி.மீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். விவசாயப்பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படும். நிலங்களை அளப்பதற்கு டிரோன் கிசான் அறிமுகம் செய்யப்படும்.
  • எண்ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு அரசு முக்கியத்துவம் தரும்.
  • ரூ.44,000, கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். காவிரி- பெண்ணாறு உள்ளிட்ட ஐந்து நதிகளின் இணைப்புக்கு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!