இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை

முதன் முறையாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இருமுறையும் கொரோனா காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா அதிகரித்ததால் அவரது மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருநாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர் வந்தார். போரிஸ் ஜான்சனை குஜராத் முதல்-மந்திரி புபேந்திரபட்டேல், மாநில கவர்னர் உள்ளிட்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.
அகலாபாத்தில் முதலீடு, வர்த்தகம் தொடர்பான விஷயங்களை போரிஸ் ஜான்சன் இன்று கவனிக்கிறார். அகலாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு செல்லும் போரிஸ் ஜான்சன் சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். அகலாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார். போரிஸ் ஜான்சன் - மோடி இடையேயான சந்திப்பின்போது இருநாட்டுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது உக்ரைன் மீதான போரில் இந்தியா ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் இந்திய பிரதமர் மோடியை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu