பட்டப் படிப்பை முடித்த 6 மாதத்திற்குள் பட்டம் தர வேண்டும் - யுஜிசி
மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள் பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றிக்கையில், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்திற்குள்ளாக பட்டங்களை வழங்க வேண்டும். தாமதம் செய்தால் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்கள் தாமதம் செய்வதாக நாடு முழுவதுதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, பட்டங்களை பெறுவதில் ஏற்படக்கூடிய தாமதம் காரணமாக மாணவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.
இதை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது. எனவே, 6 மாதத்திற்குள் பட்டங்களை வழங்குவதற்கு அனைத்து பல்கலைக்கழகங்களும் முன்வர வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu