ஜம்மு காஷ்மீர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
X
ஜம்மு காஷ்மீரில் நாக்பால் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஷோபியானின் நாக்பால் பகுதியில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்று நடந்த என்கவுன்டரில் லஸ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த என்கவுன்டர் பற்றிய முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!