டிவி விலை குறையும், தங்கம் விலை மேலும் ஏறும்: பட்ஜெட் ஹைலைட் பாய்ண்ட்ஸ்

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்)இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு உள்ளது. பல பொருட்களுக்கு வரி சலுவை வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சில பொருட்களின் விலை ஏறும், சில பொருட்களின் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் பட்ஜெட் ஹைலைட் பாய்ண்ட்ஸ் பற்றி இனி பார்ப்போமா?
*மீனவர் நலன், மீன் பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*இலவச உணவு தானியங்கள் நாடு முழுவதும் வழங்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு
*ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத வகையில் அதிக பட்சமாக ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு.
*பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.79ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
*நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்.
*மத்திய அரசின் பான் கார்டு இனி அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.
*நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
*விவசாயிகள் இயற்கை உரம் பயன்படுத்துவதை ஊக்குவிக்க பி.எம் பிரணாம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
*தகவல் தொழில் நுட்ப துறையில் 5 ஜி தொழில் நுட்ப வளர்ச்சிக்காக நாடு முழுவதும் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
*மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
*வங்கிகள் செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
*அஞ்சலகங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*செல்போன், கேமரா, டிவி ஆகியவற்றின் உதிரி பாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிவி மற்றும் செல்போன் ஆகியவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
*தங்கத்திற்கான வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை மேலும் ஏறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu