திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர சேவைகள் ரத்து
திருப்பதி கோவில்
கோடை விடுமுறை ஆரம்பித்துள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
திருப்பதி கோவிலில் பெருமாளுக்கு தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர சேவைகள் என ஆர்ஜித சேவைகள் நடந்துகொண்டே இருக்கும். இந்த சேவைகளுக்கு ஏராளமான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருவர்.
இந்நிலையில் தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், தற்காலிகமாக வாராந்திர சேவைகளை ரத்து செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவ ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
அந்த வரிசையில், அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை மற்றும் நிஜபாத தரிசன ஆர்ஜித சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்ய தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இதற்கு பக்தர்கள், மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன ஏற்பாடு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu