நின்று கொண்டிருத்த பேருந்து மீது லாரி மோதல்: 11 பேர் உயிரிழப்பு

நின்று கொண்டிருத்த பேருந்து மீது லாரி மோதல்:  11 பேர் உயிரிழப்பு
X

விபத்து நடந்த இடம் 

ராஜஸ்தான் நெடுஞ்சாலையில் பேருந்து பழுதடைந்து நின்ற நிலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் 11 பேர்உயிரிழந்துள்ளனர்

ராஜஸ்தானின் பரத்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.

ராஜஸ்தானின் புஷ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவனத்திற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ​​அதிகாலை 4.30 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எரிபொருள் தீர்ந்ததால் பேருந்து பாலத்தில் நின்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரும் சில பயணிகளும் பேருந்தின் பின்னால் நின்று கொண்டிருந்த போது வேகமாக வந்த டிரக் வாகனத்தின் மீது மோதியதாக உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்

லக்கன்பூர் பகுதியில் உள்ள ஆன்ட்ரா மேம்பாலத்தில் எரிபொருள் தீர்ந்ததால் பேருந்து நிறுத்தப்பட்டது, அப்போது பின்னால் இருந்து லாரி மோதியது. இதில் 5 ஆண்களும், 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare technology