சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் விவகாரம்! முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம்!

சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் விவகாரம்! முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம்!
X
சிங்கங்களுக்கு அக்பர், சீதா பெயர் சூட்டப்பட்ட விவகாரத்தில் முதன்மை வனப் பாதுகாவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில், முதன்மை வனப் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என்று பெயர் சூட்டியிருப்பது, மத நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி விஎச்பி அமைப்பினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, முதன்மை வனப் பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விலங்குகள் பரிமாற்ற நடவடிக்கையின்படி, திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவிலிருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12ஆம் தேதி ஆண், பெண் என இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த இரண்டு சிங்கங்களில் ஒரு சிங்கத்துக்கு அக்பர் என்றும், மற்றொரு சிங்கத்துக்கு சீதா என்றும் திரிபுராவின் முதன்மை வனப்பாதுகாவலர் பிரபின் லால் அக்ரவால் பெயர் சூட்டியிருந்தார். இவர் 1994ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியாவார். இவர்தான், சிங்கங்களை சிலிகுரிக்கு அனுப்பும் போது அதற்கான ஆவணங்களில் அக்பர், சீதா என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்விரு சிங்கங்களும் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது.

அதில், சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என சூட்டப்பட்டிருக்கும் பெயர்களை மாற்ற வேண்டும். இந்து மத வழக்கப்படி, சீதை தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் சிங்கத்துடன் சீதா சிங்கத்தை ஒன்றாக பராமரிப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்று கோரியிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி , சிங்கங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றும், சிங்கங்களுக்கு இந்தப் பெயரை வைத்தது யார்? என்றும் இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், ஒரு மதத்தைச் சேர்ந்த, மரியாதைக்குரிய, போராளிகள் போன்றவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்குச் சூட்ட வேண்டாம் என்றும், இரண்டு சிங்கங்களின் பெயர்களையும் மாற்றுங்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, பிரபின் லால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அக்பர், சீதா என பெயர் சூட்டியதற்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
why is ai important to the future