கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்தியா

கிரிக்கெட்: வெற்றியை நோக்கி இந்தியா
X

நான்காம் நாள் ஆட்டத்தில் சதமடித்த ஜோ ரூட், ஐந்து விக்கட் வீழ்த்திய பும்ரா

இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 209 ரன்கள் இலக்கு

ட்ரென்ட் பிரிட்ஜ்-ல் நடைபெற்றுவரும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 278 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராகுல் 84 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் ராபின்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரூட் சதமடித்தார். பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 209 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஒரு விக்கட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது. ராகுல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ரோஹித் சர்மா (12), புஜாரா (12) ஆகியோர் களத்தில் உள்ளன,

ஐந்தாம் நாளான இன்று இந்தியா வெற்றி பெற 98 ஓவர்களில் 157 ரன்கள் எடுக்கவேண்டும்.

Tags

Next Story
future of ai act