ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
X
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக இது பதிவானது.

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து, இதுவரை தகவல் இல்லை.

ராஜஸ்தான் ஜொலூர் மாவட்டத்தை மையம் கொண்டு, பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, தேசிய புவியியல் ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இது, அதிகாலை 2.30 மணியளவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவான நில நடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால், மக்கள் பீதிக்குள்ளாகினர். எனினும், நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது,இனிமேதான் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!