அந்தமான், நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்

அந்தமான், நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்
X

கோப்புப்படம்

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாகவும் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி