கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டது ராணுவம்
பாபுவை பத்திரமாக மீட்க மகிழ்ச்சியில் இந்திர ராணுவ மீட்புக்குழுவினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலைக்கு, சேரடு பகுதியைச் சேர்ந்த பாபு (23) என்பவர், கடந்த 7ம் தேதி நண்பர்களுடன் சென்றார். எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி பகுதியில் மலையேற்றம் செய்து கொண்டிருந்த போது, களைத்துப் போன பாபு பிளவில் தவறி கீழே விழுந்துள்ளார்.
எனினும், அதிர்ஷ்டவசமாக மலை முகடு ஒன்றில் சிக்கி கொண்ட அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் பலன் தரவில்லை. இதையடுத்து, இந்திய ராணுவம் உதவ வேண்டுமென்று, கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.
இதை தொடர்ந்து, வெலிங்டன் மற்றும் பெங்களூருவில் இருந்து வந்துள்ள மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், 42 மணி நேரமாக மலையில் சிக்கியிருந்த பாபுவை, இன்று காலை பத்திரமாக மீட்டனர். உணவோ, தண்ணீரின்றி இருந்த பாபுவின் உடல்நிலை, தற்போது சீராக உள்ளதாகவும், எனினும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu