கேரளாவில் பரவிவரும் தக்காளி காய்ச்சல் : கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா வைரஸ் காய்ச்சல் என பல்வேறு தொற்று நோய்கள் கேரள மாநிலத்தை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சலும் பரவ தொடங்கியது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தக்காளி காய்ச்சலானது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குவதால், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் புதிதாக பரவிவரும் தக்காளி காய்ச்சலில் இதுவரை 85 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்
தோலில் ஏரிச்சலுடன் கூடிய தக்காளி பழ அளவிற்கான சிவப்பு திட்டிகள் தோன்றுவதுடன், நாக்கில் அதிக வறட்சி தன்மைக்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இத்துடன், காய்ச்சல், உடல்வலி,மூட்டு வீக்கம், சோர்வு மற்றும் கைகள், முழங்கால்கள், பிட்டம் ஆகியவற்றின் நிறமாற்றம் போன்றவை.
இதுகுறித்து கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியதாவது:
கொல்லம் மாவட்டத்தில் இதுவரை இந்நோயில் இருந்தது 85 குழந்தைகள் பாதுக்கபட்டுள்ளனர். இந்த நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தடுப்பு நடவடிக்கையாக ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த நோய் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஆனால் கவனமுடன் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu