அடுத்த ஷாக்! ஏப். 1 முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது
அண்மையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீக்கு குறைவான தொலைவில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அதற்கு மாறாக சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்பட உள்ளன.
அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி முதல், சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் குறந்தபட்சமாக ரூ. 5 முதல், அதிகபட்சமாக ரூ.85 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதேபோல், சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம், குறைந்தபட்சம் ரூ.45 முதல், அதிகபட்சமாக ரூ. 240 வரை அதிகரிக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை கிடுகிடுவென்று அதிகரித்து வரும் நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு, வாகன ஓட்டிகளுக்கும், உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சரக்கு வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனிடையே, சுங்க கட்டணம் உயர்த்தும் முடிவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாப்பில், விவசாய சங்கங்கள் இம்முடிவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu