இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல்

இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல்
X

மல்லிகார்ஜுன்கார்கே -சசிதரூர்

இன்றுகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

அன்னிபெசன்ட் அம்மையாரால் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நூற்றைம்பது ஆண்டுக்கும் மேலான வரலாற்றுக்கு சொந்தமானதாகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இந்த கட்சியை காந்தி தலைவராக இருந்த போது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அவர் தொடர்ந்து ஜவகர்லால் நேரு உள்பட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி இருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர், ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் , கர்நாடகாவை சேர்ந்த நிஜலிங்கப்பா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்தவர்களும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்திருக்கிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி அகில இந்திய கட்சியாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கட்சியின் கிளை நிர்வாகிகள் முதல் மாநில அல்லது அகில இந்திய தலைவர் பதவி வரை தேர்தல் நடத்தி அறிவித்தால் தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும். தேர்தலிலும் போட்டியிட முடியும் என்பது பொதுவான விதியாகும்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில வாரியாக நிர்வாகிகள் மற்றும் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் போட்டியிடலாம் என்று அறிவிப்பு வெளியானது.

பொதுவாக காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என நேரு குடும்பத்தினரே தொடர்ந்து பதவியில் இருந்து வந்திருக்கிறார்கள். இடையில் ராகுல் காந்தி சிறிது காலம் காங்கிரஸ் தலைவராக இருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் காரணமாக அவரது தாயார் சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால தலைவராக இருந்து வருபவர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது.

இந்த சூழலில் தான் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேவிற்கும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 ஆயிரத்து 300 பேர் அகில இந்திய அளவில் வாக்களிக்க உள்ளார்கள்.தமிழகத்தில் இருந்து மட்டும் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரசார் வாக்களிப்பதற்காக சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நான்கு வாக்கு பெட்டிகள் வந்துள்ளன. சத்தியமூர்த்தி பவனில் மட்டும் நான்கு வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வாக்கு சீட்டில் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. வாக்களிப்பவர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர் பெயருக்கு நேராக டிக் செய்ய வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவுனிற்குள் நுழைய முடியும். மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரதாப் பானு சர்மா உதவி தேர்தல் அதிகாரிகளாக நையாற்றின் கரை சணல் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயருக்கு நேராக கையெழுத்திட வேண்டும். அவர்கள் கையெழுத்து போட்டதும் அவர்களிடம் வாக்கு சீட்டு வழங்கப்படும். வாக்களித்து முடிந்ததும் அவர்கள் சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்கு வெளியே வந்து விட வேண்டும் தேர்தல் முடிந்ததும் வாக்கு பட்டியல் இன்று இரவு டெல்லி கொண்டு செல்லப்படும். 19 ஆம் தேதி புதன்கிழமை வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி எம்.பி. கர்நாடக மாநிலம் பல்லாரி அருகே உள்ள சந்தனக் கல்லு என்ற இடத்தில் வாக்களிக்க இருக்கிறார். அவருடன் பாரத்ஜோடா யாத்திரையில் உள்ள பி.சி.சி. பிரதிநிதிகள் 40 பேரும் வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் சோனியா காந்தி ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. ஆதலால் உண்மையான ஜனநாயகம் முறைப்படி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மேலிட தலைவர்களின் ஆதரவு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இருப்பதால் அவரே வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது. யார் வெற்றி பெற்றாலும் சோனியா காந்தி மூலமாகவோ அல்லது ராகுல் காந்தி மூலமாகவோ ரிமோட் மூலம் இயக்கப்பட மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக யார் வெற்றி பெற்றாலும் அவர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவார் என்றும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியால் ஏற்கனவ அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!