கார்கில் போரில் இந்திய படைகள் வெற்றி பெற்ற தினம் இன்று கொண்டாடப்படுகின்றது
கார்கில் போரில் இந்திய படைகள் வெற்றி பெற்ற தினம்
கார்கில் போரில் இந்திய படைகள் வெற்றி பெற்ற தினம் இன்று கொண்டாடப்படுது.ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் திவஸ் என அழைக்கப்படும் இந்நாளுக்காக காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்குது. நம் நாட்டுக்கு சொந்தமான கார்கில் பகுதியை ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படை வீரர்களை இந்திய படைகள் கடந்த 1999 ம் ஆண்டு ஜூலை 26 ம் தேதி முழுமையாக விரட்டி அசூர பலத்தை காட்டிச்சு. அப்பேர்பட்ட கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்வோமே..
காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது. இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீரில், ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இந்தியப் படைகள் வெற்றி பெற்ற இந்நாளை, வீரர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu