பொதிகை தொலைக்காட்சி துவங்கப்பட்ட தினம் இன்று ( 14 ஏப்ரல் 1993 ) .

பொதிகை தொலைக்காட்சி துவங்கப்பட்ட தினம் இன்று  ( 14 ஏப்ரல் 1993 )    .
X
பொதிகை தொலைக்காட்சி - தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையின் பெயரால் "டிடி பொதிகை " என பெயர் சூட்டப்பட்டது.

இந்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான "பொதிகை தொலைக்காட்சி" துவங்கப்பட்ட தினம் இன்று. ( 14 ஏப்ரல் 1993 )


இணைப்பில் அன்றைய இன்றைய செய்திவாசிப்பாளர்களில் சிலர்.

இந்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமாகிய தூர்தர்சன் பல்வேறு மொழிகளுக்காகத் தனித்தனி செயற்கைக்கோள் அலைவரிசைகளை அறிமுகப்படுத்தியபோது சென்னை மண்டலத்தில் தமிழ் மொழி நிகழ்ச்சிகளுக்காக 1993 ம் ஆண்டு "டிடி-5" என்ற தொலைக்காட்சி சேவையை நிறுவியது.

இதன் சேவைகள் இந்தியாவிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பார்க்கப்படுகிறது. எண்களுக்கு மாறாக உள்ளூர் பெயர்களைக் கொடுக்கும் தூர்தர்சனின் கொள்கையின்படி பார்வையாளர்களிடமிருந்து பொருத்தமான பெயர் ஒன்றை பரிந்துரைக்க வேண்டப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ் பிறந்ததாகக் கருதப்படும் பொதிகை மலையின் பெயரால் "டிடி பொதிகை " என பெயர் சூட்டப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!