பத்ம விருதுகள் யார் யாருக்கு வழங்கபடுகிறது? பட்டியல் வெளியீடு
நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகளை குடியரசு தினவிழாவில் ஆண்டுதோறும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதாவது கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் ஆகிய துறைகளில் சிறப்புமிக்க சேவைக்காக 'பத்ம விபூஷன்' வழங்கப்படுகிறது.
சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷன்' மற்றும் புகழ்பெற்றவர்களுக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகளை குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 128 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் 4 பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விருது பெற்றவர்களில் 34 பேர் பெண்கள் மற்றும் வெளிநாட்டினர்/என்ஆர்ஐ/பிஐஓ/ஓசிஐ வகையைச் சேர்ந்த 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் 13 பேர் ஆவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu