நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்

நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
X

அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் இன்று நேரில் சந்தித்து முறையிடுகிறது.

தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித்தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது.

எனவே, தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில், மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் இணைந்து டெல்லியில் இன்று (மே 18) மத்திய நிதி அமைச்சர் சீதாராமனையும், ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலையும் நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது, நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!