மத்திய பிரதேசம்: ராணுவ கல்லூரிக்குள் ஒய்யாரமாக நடந்து வந்த புலி
ராணுவ கல்லூரியில் உலா வந்த புலி.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் ராணுவ பாதுகாப்பு சேவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கேட் எண் 3 அருகே ஒற்றை புலி நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சிட்டுக்குருவி என்ற டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், அவரது டுவிட்டர் பக்கத்தில் புலி கம்பீரமாக நடந்து செல்லும் வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார். அதில், 08.05.23 இரவு ராணுவ கல்லூரி வளாகத்தின் கேட் எண் 3க்கு உள்ளே ஒரு புலி எந்தவித பயமும் இன்றி நடமாடிக் கொண்டுள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த கிளிப்பைப் பகிர்ந்த, இந்திய வன சேவை அதிகாரி, "ஒரு முதலாளியைப் போல நடசெல்கிறது" என ரீடுவிட் செய்துள்ளார்.
முன்னதாக ஆறு காப்பகங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளின் தாயகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. கடந்த ஆண்டு, போபலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் புலி ஒன்று குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu