கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்க தமிழகம் வருகிறார், திரெளபதி முர்மு..!
பா.ஜ கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு.
Political News Today India -பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில, திரெளபதி முர்மு , இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா கேரளா சென்று, அம்மாநில முதல்வர் பிணராயி விஜயனை சந்தித்து விட்டு தமிழகம் வந்து முதல்வர் ஸ்டாலினிடன் ஆதரவு திரட்டினார்.
இதற்கு போட்டி போடுவது போல, திரெளபதி முர்மு இன்று பகல் 1-30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தமிழகம் வருகிறார். தனி விமானத்தில் மதியம் 2:00 மணிக்கு சென்னையை வந்தடைகிறார். அவருக்கு பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் விடுதியில் பா.ஜ., - அ.தி.மு.க., - பா.ம.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து திரெளபதி ஆதரவு கேட்கிறார் எனவும் இதைத்தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, தனி விமானத்தில் சென்னையில் இருந்து டில்லி செல்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu