பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு.
BJP News Today Live - இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18- ம் தேதி தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவை அறிவித்தன. இதையடுத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் முர்மு, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். குடியரசு தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது விதிமுறை. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu