டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவக்கம்

டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால  கூட்டத்தொடர் துவக்கம்

இந்திய நாடாளுமன்றத்தின் மைய அலுவலகம் (கோப்பு படம்)

டிசம்பர் 4ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றம் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் வருகிற 17-ஆம் தேதி நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பொதுவாக நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரானது நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறுவதால் குளிர்கால கூட்டத்தொடர் சற்று தாமதமாக தொடங்குகிறது.

தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் நான்காம் தேதி குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இது தவிர விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம், அயோத்தி ராமர் கோவில் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் விவாத பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story