நவராத்திரியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து

இன்று தொடங்கிய நவராத்திரி விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு சாரதா நவராத்திரி 8 நாட்கள் மட்டுமே கொண்டாடப்படும். சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதி ஒரே நாளில் வருவதே இதற்கு காரணம். புரட்டாசி மாதத்தின் வளர்பிறை நாளான அக்டோபர் 7ம் தேதி இன்று தொடங்குகிறது.

இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். வரவிருக்கும் நாட்களில் ஜெகத் ஜனனி தாயை வழிபடுவதற்காக நம்மை அர்ப்பணிப்போம்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் வலிமை, நல்ல ஆரோக்கியம், செழிப்பு ஆகியவற்றை நவராத்திரி கொண்டுவரட்டும். நவராத்திரியின் முதல் நாளில், தாய் மலைமகளை நாம் வழிபடுவோம் என தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!