/* */

பொங்கல் திருநாள் முதல் புதுப்பொலிவு பெற போகிறது பொதிகை டிடி தமிழ்

பொங்கல் திருநாள் முதல் பொதிகை, டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற போகிறது.

HIGHLIGHTS

பொங்கல் திருநாள் முதல் புதுப்பொலிவு பெற போகிறது பொதிகை டிடி தமிழ்
X

தூர்தர்ஷன்... இது மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி நிறுவனம் ஆகும். தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள செய்திகள் மற்றும் அரசின் கொள்கைகளை அறிவிக்கும் ஒளிபரப்பு செய்யும் ஒரே நிறுவனமாக இருந்தது. தூர்தர்ஷன் தமிழ் ஒளிபரப்பு செய்திகளுக்கு டிடி பொதிகை என பெயர் சூட்டப்பட்டு இருந்தது பல ஆண்டு காலமாக இந்த பெயரில் தான் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பாக தூர்தர்ஷன் செய்திகள் மட்டுமே அனைவரின் கண்களிலும் பட்டன காதுகளிலும் கேட்டன. இன்றைய இளைஞர்களுக்கு தூர்தர்ஷனின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பு இல்லை. ஏனென்றால் தனியார் தொலைக்காட்சிகள் இந்தியாவில் கால் ஊன்றி 25 ஆண்டு காலத்தை தாண்டி விட்டன. அதனால் தற்போது 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் தூர்தர்ஷன் என்ற அரசின் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் பற்றி தெரியவரும்.

அரசின் சார்பில் வெளியிடப்படும் செய்தி என்பதால் அதற்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு தான். அந்த வகையில் தற்போது பொதிகை என்ற பெயரில் உள்ள டிடி சேனலின் பெயர் வருகிற தைப்பொங்கல் திருநாள் முதல் டிடி தமிழ் என மாற்றம் செய்யப்பட இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கால சூழலுக்கு ஏற்ப டிடி தமிழ் செய்தி சேனல் நவீனப்படுத்தப்பட்டு நவீன தகவல் தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவு பெறும் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் அதன் நிகழ்ச்சிகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Nov 2023 10:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...