அ.தி.மு.க. பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு தாக்கல்..!

அ.தி.மு.க. பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுவதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் தரப்பு மனு தாக்கல்..!
X
AIADMK News Today -ஜூலை 11 ல் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.,வில் ஒற்றைத்தலைமை விவகாரத்திற்கு முடிவு கட்ட சென்னை வானகரத்தில் பொதுக்குழு,செயற்குழு கூட்டப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. குழப்பமே மிஞ்சியது. மேலும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதையடுத்து அன்றைய தினமே தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, பன்னீர்செல்வத்தை சந்தித்தார். இதையடுத்து இரவில் பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது எனவும், எனவே, 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடது எனவும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai in future agriculture