இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 74.38 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 74.38 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,38,945 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 75,64,949 முகாம்களில் 74,38,37,643 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 37,687 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,24,47,032 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.54 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து 78 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,74,269 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.13 சதவீதம் ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,08,247 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 54,30,14,076 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 80 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.11 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.26 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து 14 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 97 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu