இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 66 கோடியைக் கடந்தது

இந்தியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 66 கோடியைக் கடந்தது
X
நம்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பில் 97.48 % பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 66 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 81,09,244 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி நிலவரப்படி, மொத்தம் 69,60,983 முகாம்களில் 66,30,37,334 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 35,181 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது.

நம்நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.48 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 67 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47,092 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,89,583 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.19 சதவீதம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 16,84,441 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,48,68,734 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 69 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 2.62 சதவீதம் என்ற அளவிலும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.80 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 37 நாட்களாக அன்றாடத் தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 87 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story