காஷ்மீர் படுகொலை: புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது
ஜம்மு காஷ்மீரில் 9 இந்திய வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர், சில வாரங்களுக்கு முன்னர் காஷ்மீரில் உள்ள முக்கிய இந்துக்களையும், சீக்கியர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பள்ளியில் புகுந்து 2 ஆசிரியர்களையும் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பிற மாநில தொழிலாளர்களையும் தீவிரவாதிகள் குறிவைத்து கொன்று வருகின்றனர். இதன் மூலம் பயங்கரவாதிகள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.
PAFF என்று பெயரிடப்பட்ட அந்த தீவிரவாதக் குழு வெளியிட்ட 8 நிமிட வீடியோவில், "அக்டோபர் 11 ஆம் தேதி தீவிரவாதிகள் 10 மணி நேரமாக ராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரில் முஸ்லீம் அல்லாதவர்களை மேலும் பல படுகொலைகளை செய்ய உள்ளதாக அந்த இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை ஏவி மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகின்றது. இது வரை ஏராளமான அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் கொன்று குவித்துள்ளார்கள். மேலும் தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடுருவியவாறு உள்ளார்கள். லஸ்கர்-இ தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹர்க்கத் உல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. திடீரென புதிய இயக்கங்களும் தோன்றி அவ்வப்போது தாக்குதல் நடத்துவது வேதனையானது.
காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டு வந்து பொருளாதாரத்தை மேம்படுத்த அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அதுமட்டுமல்லாது, காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் நிலம் வாங்கவும், தொழில் செய்யவும் ஊக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல மாநிலத்தவர்கள் அங்கு செல்லத் தொடங்கினார்கள். முக்கியமாக உத்தரப்பிர தேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சாதாரண தொழிலாளர்கள் பிழைப்பு தேடிச் சென்றனர். இப்படிப்பட்ட நிலையில், இவர்களையும் தாக்கி கொலை செய்தனர். சில வாரங்களுக்கு முன்னர் காஷ்மீரில் உள்ள முக்கிய இந்துக்களையும், சீக்கியர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
அதன்பிறகு பள்ளியில் புகுந்து 2 ஆசிரியர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து பிற மாநில தொழிலாளர்கள் மீதும் தீவிரவாதிகள் குறிவைக்கத் தொடங்கினார்கள்.
அந்த வகையில் பீகார் மாநிலத்தில் இருந்து சென்ற சில தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். அந்த வகையில் இந்த மாநிலத்தில் மட்டும் மொத்தம் 11 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
இந்த தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிட்டனர். அந்த வகையில் சந்தேகத்திற்கு இடமான 900 பேரை பிடித்து விசாரித்தார்கள். அந்த சமயத்தில் நடந்த சண்டைகளின்போது, சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். பாதுகாப்புப் படையினரும் உயிரிழக்க நேர்ந்தது.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடந்த கொலைகள் குறித்து இந்த அமைப்பினர்தான் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் இப்படி செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், இந்த தாக்குதல்களுக்கு புதிய தீவிரவாத இயக்கம் ஒன்று பொறுப் பேற்றுள்ளது. அதாவது பி.ஏ.எப்.எப். என்ற அமைப்பு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐ.எஸ். அமைப்பும் சொந்தம் கொண்டாடியுள்ளது. இந்நிலையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஆலோசனை நடத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu