இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952
X
நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும்

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று தான் தொடங்கப்பட்டது தெரியுமா?.

இந்திய நாடாளுமன்றம் என்பது நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை மற்றும் மக்களவை என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.

அமைச்சரவை நாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி மற்றும் எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர்.

மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.

மக்களவை அல்லது லோக் சபா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.

மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் அதிக உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் சிலர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இவர்களை தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள தடை அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது. மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று தொடங்கப்பட்டது.

நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது.

8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது.இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.

Tags

Next Story
தினம் 1 கேரட்..!  பச்சையாக சாப்பிட்டால் உங்க முகம் பளபளவென மாறிடும் தெரியுமா...? | Carrot benefits in tamil