இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி 92.63 கோடி

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 92.63 கோடியாக உள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,09,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 92.63 கோடியை கடந்துள்ளது. 90,14,182 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,00,258- ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 97.95 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் இதுவே அதிகமான அளவு.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 102 நாட்களாக 50,000க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,44,198; கடந்த 204 நாட்களில் இது மிக குறைந்த எண்ணிக்கை. நாட்டில் மொத்தம் கொரோனா சிகச்சை பெறுபவர்களின் விகிதம் தற்போது 0.72 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 14,31,819 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 57.86 கோடி கொரோனா பரிசோதனைகள் (57,86,57,484) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 104 நாட்களாக 3 சதவீதத்திற்கும் கீழே, 1.68 சதவீதமாகவும், தினசரி கொரோனா தொற்று உறுதி விகிதம் 1.57 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 38 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 121 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture