அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
X
Terrorists Kill In Encounter ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Terrorists Kill In Encounter ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும், தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் பல்வேறு பயங்கரவாத குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.

Terrorists Kill In Encounter அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவர்கள் இருவரும் அனந்த்நாக் நகரின் இஷ்பக் ஆ கனி மற்றும் அவந்திபோரா பகுதியை சேர்ந்த யவார் அயூப் தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

சமீபத்தில் கடந்த 3 நாட்களில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் உள்பட 10 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!