காவலரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக் கொண்டு தீவிரவாதி ஓட்டம்

காவலரிடம் இருந்து  துப்பாக்கியை பறித்துக் கொண்டு  தீவிரவாதி ஓட்டம்
X
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி காவல் ஆய்வாளரின் துப்பாக்கியுடன் தீவிரவாதி தப்பியோடியதை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரின் ஆயுதத்தை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பெல்லோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி காவல் ஆய்வாரின் துப்பாக்கியுடன் பயங்கரவாதி ஒருவர் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அதிகாரி அப்பகுதியில் சிஆர்பிஎஃப் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, ஆயுதம் பறித்தவனைக் கண்டுபிடிக்க காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!