கவர்னருடன் கருத்து வேறுபாடு: குடியரசு தினத்தை புறக்கணித்த முதல்வர்

கவர்னருடன் கருத்து வேறுபாடு: குடியரசு தினத்தை புறக்கணித்த முதல்வர்
X

ஹைதராபாத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆளுநர் தமிழிசை

ஆளுநருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவை தெலங்கானா முதல்வர் கேசிஆர் புறக்கணித்துள்ளார்

இந்தியாவின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

ஹைதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தெலுங்கானாவில் கவர்னர் மாளிகையில் நடந்த குடியரசு தின விழாவை, முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார். கவர்னர் தமிழிசை தேசியக்கொடியேற்றிய நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.

ஆளுநருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜ்பவனில் நடந்த குடியரசு தின விழாவை தெலங்கானா முதல்வர் கேசிஆர் புறக்கணித்துள்ளார்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை. பரேட் மைதானத்தில் குடியரசு தின விழாவை நடத்தவும், அணிவகுப்பு நடத்தவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்று காலை வரை மாநில அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த அணிவகுப்பு ராஜ்பவனில் நடத்தப்பட்டது,

கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆனால், இந்த விழாவில் பங்கேற்காமல், முதல்வர் சந்திசேகர ராவ் புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொண்டாட்டங்களின் போது மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கேசிஆர் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்