ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் சிக்கி நொறுங்கியது தேஜஸ் போர் விமானம்

ராஜஸ்தான் மாநிலத்தில் விபத்தில் சிக்கி நொறுங்கியது தேஜஸ் போர் விமானம்

விபத்தில் சிக்கிய தேஜஸ் விமானம் தீ பிடித்து எரியும் காட்சி.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த விபத்தில் சிக்கி தேஜஸ் போர் விமானம் நொறுங்கி போய் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது. தேஜஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்திய விமானப்படை சார்பில் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். இருப்பினும், சில சமயம் இதுபோல பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துகள் ஏற்பட்டுவிடும்.

அப்படி வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது தான் ராஜஸ்தான் மாநிலத்தில் தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. ராஜஸ்தான் ஜெய்சால்மரில் விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்குள்ள மாணவர் விடுதி அருகே இந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. கடைசி நொடிகள்: தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியுள்ளது இதுதான் முதல்முறை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். விமானத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பைலட் கடுமையாக முயன்றுள்ளனர். இருப்பினும், கடைசி நொடிகளில் அது கட்டுப்பாட்டை இழந்ததால் அது விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும், அது கட்டுக்குள் வராமல் தரையில் விழுந்து நொறுங்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு இல்லை: நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானம் தரையில் மோத சில நொடிகளே இருந்த போது சமயோஜிதமாக செயல்பட்ட பைலட் அதில் இருந்து பாராசூட் மூலமாக வெளியேறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் ஒன்று ஜெய்சால்மரில் இன்று பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

தேஜஸ் என்பது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானமாகும். தேஜாஸ் போர் விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தான் வடிவமைத்தது. இந்திய ராணுவத்தில் உள்ள பழைய மிக் 21 போர் விமானங்களுக்குப் பதிலாக இதை ராணுவத்தில் இணைப்பதே இதன் நோக்கமாகும். கடந்த 2003ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இதற்கு 'தேஜஸ்' அதாவது சமஸ்கிருதத்தில் பிரகாசம் என்று பொருள் என்று பெயர் வைக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

Tags

Next Story