மாணவர்களை சிகரத்துக்கு உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள்: தமிழிசை பெருமிதம்
புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை.
Tamilisai Soundararajan -நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 75 பள்ளிகளை பார்வையிட்டு துணை நிலை ஆளுனர் தமிழிசை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நேற்று 5 பள்ளிகளை ஆளுனர் பார்வையிட்டார். அப்போது, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி முதல்வர் பங்கேற்றனர்.
இதையடுத்து பேசிய ஆளுனர் தமிழிசை, மாணவர்களிடம் தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை எனவும், மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பணியாற்றுகின்றனர் எனவும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஆளுனர் தமிழிசை அறிவுறுத்தினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu