/* */

மும்பை அருகே டாடா நெக்ஸான் மின்சார கார் தீப்பிடித்தது

மும்பையின் வசாய் சாலையில் பரபரப்பான சந்திப்பில் டாடா நெக்ஸான் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது

HIGHLIGHTS

மும்பை அருகே டாடா நெக்ஸான் மின்சார கார் தீப்பிடித்தது
X

zமும்பையின் வசாய் சாலையில் ஒரு உணவகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்திருந்த வெள்ளை நிற டாடா நெக்ஸான், நேற்று இரவு 7.00 மணியளவில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்தற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவத்தால் உயிர் சேதமோ, காயமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

டாடா மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இந்த சம்பவத்தின் உண்மைகளை கண்டறிய தற்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு விரிவான பதிலைப் பகிர்ந்து கொள்வோம். எங்கள் வாகனங்கள், அவற்றின் பயனர்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சுமார் 4 ஆண்டுகளில் 30,000க்கும் அதிகமான மின்சார கார்கள் நாடு முழுவதும் விற்கப்பட்டுள்ளது. இதுபோன்று நடப்பது இதுவே முதல் சம்பவமாகும்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஒவ்வொரு இரண்டு மின்சார வாகனத்தில் டாடா நெக்ஸான் ஒன்றாகும். நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 30,000 க்கும் மேற்பட்ட மின்சார கார்களை விற்றுள்ளது. விற்பனை செய்யப்பட்ட அந்த கார்களில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை.

ஐந்து இருக்கைகள் கொண்ட டாடா நெக்ஸான் மின்சார கார், 30.2 லித்தியம் அயன் பேட்டரி பேக் மூலம் திரவ குளிரூட்டப்பட்ட வெப்ப மேலாண்மை அமைப்புடன் இயக்கப்படுகிறது. இந்த வாகனம் மோட்டார் மற்றும் பேட்டரி பேக்கிற்கு IP67 தரப்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் கூறுகையில், மிக முக்கிய அம்சமான வெப்ப மேலாண்மையில் நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதாக கூறினர். பேட்டரி பேக்குகளுக்குள் இருக்கும் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக, இங்கிலாந்து பிராண்டுகளான ஜாகுவார் லேண்ட் ரோவரிடமிருந்து தொழில்நுட்பத்தை இரவல் பெற்றுள்ளது.

டெஸ்லா மாடல்களில் நிகழ்ந்தது போல் மின்வாகனங்களில் தீ விபத்துகள் உலகளவில் பொதுவானவை என்றாலும், இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படும்போது மின்சார வாகன தொழில்நுட்பத்தின் மீது நுகர்வோருக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.

செல்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் உற்பத்தி உள்ளிட்ட மின்சார வாகங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் விலையில் கிடைக்கும் நெக்ஸான் மின்சார கார் முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ வரை செல்லும். சில வாரங்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் முழுமையான சார்ஜில் 437 கிமீ தூரம் செல்லும் நெக்ஸான் ஈவி மேக்ஸ் என்ற மற்றொரு மாறுபாட்டை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.17.74 லட்சம்.

Updated On: 23 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!