டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா
X

ராஜேஷ் கோபிநாதன்.

இந்தியாவில் மிகப் பெரிய சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த ராஜேஷ் கோபிநாதன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் மிகப் பெரிய சாப்ட்வேர் சர்வீசஸ் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் கோபிநாதன் கடந்த 2017ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-ஆக பதவியேற்றார். அதற்கு முன்னர் இதே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். கிட்டத்தட்ட சிஇஓ-வாக பதவியேற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் தனது பதவியை ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்துள்ளார். வரும் செப்டம்பர் 15ம் தேதி இந்த பதவியில் இருப்பார் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராஜேஷ் கோபிநாதன் பதவி விலகியதை அடுத்து கிருத்திவாசன் பொறுப்பு தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் நிதிச்சேவைகள், இன்ஷூரன்ஸ் மற்றும் வங்கிச் சேவைகள் பிரிவின் சர்வதேச தலைவராக உள்ளார். இவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் 1989ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai powered agriculture