மத்திய பட்ஜெட் உரையில் ருசிகரம்: ஒழிக்கப்படவேண்டியது பொலிட்டிக்கல் பார்ட்டிகளா?
பட்ஜெட் உரையின்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மாசு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பொலூடட் வெஹிகிள்ஸ் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக பொலிட்டிக்கல் வெஹிகிள்ஸ் ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் இன்று தாக்கல் செய்திருப்பது ஐந்தாவது பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட் உரையை அவர் தனக்கே உரித்தான எளிய நடையில் அழகான ஆங்கில உச்சரிப்புகளுடன் படித்தார். அதை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரசித்து கேட்டனர் .அரசின் முக்கிய கொள்கை அறிவிப்புகள் தொடர்பான குறிப்புகளை அவர் படித்த போது பிரதமர் மோடி மேஜையில் கைத்தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதேபோல மத்திய அமைச்சர்களும் தங்களது மகிழ்ச்சியை கைதட்டல் மூலம் வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்ததால் தாகம் ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் அவர் மத்திய அரசு மாசு கட்டுப்பாடு சம்பந்தமாக உருவாக்கி உள்ள ஒரு புதிய திட்டத்தை பற்றி குறிப்பிடும் போது நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் பொலூடட் வெஹிகிள்ஸ் அதாவது மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என குறிப்பிடுவதற்கு பதிலாக பொலிட்டிக்கல் வெஹிகிள்ஸ் என குறிப்பிட்டு விட்டார். அதாவது அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய அரசியல் கட்சி வாகனங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் பேசியதால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.இதனை உடனடியாக உணர்ந்து கொண்ட நிர்மலா சீதாராமன் தனது டங்க் சிலிப்பினால் ஏற்பட்ட இந்த தவறை உணர்ந்து உடனடியாக அந்த வார்த்தைகளை மீண்டும் சரியான விதத்தில் உச்சரித்தார். அதனை 2முறை திரும்ப படித்து தனது சரியான உச்சரிப்பை உறுதிப்படுத்தினார்.
மத்திய அரசு நாட்டில் மாசு கட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக அதிக புகைகளை வெளிப்படுத்தக்கூடிய பழைய வாகனங்களை ஒழித்து கட்ட வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக கியாஸ் மற்றும் மின்சார பயன்பாடு வாகனங்களை பயன்படுத்துவதற்கு அதிக ஊக்கப்படுத்தி வருகிறது. அது தொடர்பான முறையில் தான் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை சபையில் வெளியிட்டார். அப்போதுதான் இந்த தவறு நடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இதனை அவரது டங்க் ஸ்லிப்பினால் தான் இப்படி ஆனதா என்று எடுத்துக் கொள்வதா அல்லது வேண்டும் என்று அதிக மாசு ஏற்படுத்தும் கட்சிகள் என்ற நோக்கத்தில் மிகப் பழமையான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை குறிவைத்து வேண்டும் என்றே இப்படி பேசினாரா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழாமல் இல்லை.எது எப்படியோ இன்று அவர் பேசியது டங்க் ஸ்லிப் தான் என்பது அவையில் எழுந்த சிரிப்பொலியால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் போனது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu