சுகாதாரத்துறை தரவரிசைப்பட்டியலில் 2ம் இடத்தில் தமிழகம்: கேரளா பெஸ்ட்; உ.பி. மோசம்

சுகாதாரத்துறை தரவரிசைப்பட்டியலில் 2ம் இடத்தில் தமிழகம்: கேரளா பெஸ்ட்; உ.பி. மோசம்
X

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியல்.

சுகாதாரத்துறை தரவரிசைப்பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் கேரளா, கடைசி இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது.

தேசிய அளவிலான மாநில சுகாதாரத்துறை செயல்பாடுகள் குறித்து 4வது தரவரிசைப் பட்டியலை மத்திய அரசின் நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் உலக வங்கியின் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றுடன் இணைந்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டுக்கான பொதுமக்கள் உடல்நலன் குறியீட்டின் அடிப்படையில் சிறந்த பெரிய மாநிலங்களின் பட்டியலில் கேரளா முதலிடத்தையும், தமிழகம் 2ம் இடத்தையும், தெலங்கானா 3ம் இடத்தையும் பிடித்துள்ளது.

கேரளாவும், தமிழகமும் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் இடத்தை தொர்ந்து வருகிறது. 4ம் இடத்தில் இருந்த தெலங்கானா தற்போது 3ம் இடத்திலும், 3ம் இடத்தில் இருந்த ஆந்திரா தற்போது 4ம் இடத்திலும் உள்ளது. மிகவும் மோசமான செயல்பாடுகளில் கடைசி இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது.

தொடர்ந்து சுகாதாரத்தை மேம்படுத்தும் மாநிலங்களில் 8வது இடத்தில் தான் தமிழகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சி குறைந்துள்ளது.

சிறிய மாநிலங்களின் பட்டியலில் மிசோராம் முதலிடத்திலும், திரிபுரா 2ம் இடத்திலும், சிக்கிம் 3ம் இடத்திலும் உள்ளது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் டையூ டாமன் முதலிடத்திலும், சண்டிகர் 2ம் இடத்திலும், லட்சத்தீவுகள் 3ம் இடத்திலும், பாண்டிச்சேரி 4ம் இடத்திலும் உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!