குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு தயார்

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு  சிகிச்சை அளிக்க தமிழக அரசு தயார்
X

குரூப் கேப்டன் வருண் சிங்

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது

இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் கொல்லப்பட்ட இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். குரூப் கேப்டன் வருண் சிங் பலத்த தீக்காயங்களுடன் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு தேஜாஸ் போர் விமானத்தில் பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது, விமானத்தை திறமையாக கையாள்வதில் துணிச்சலுக்காக ஆகஸ்ட் மாதம் சௌர்ய சக்ரா விருதை வென்றார். பெரும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அவசரநிலையையும் மீறி அவர் தனது தேஜாஸ் போர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

குரூப் கேப்டன் சிங், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் கல்லூரியில் இருந்து சூலூருக்குச் சென்று, அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்ற இருந்த ஜெனரல் ராவத்தை வரவேற்க சென்றிருந்தார்.

குரூப் கேப்டனை கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனையில் மாற்றுவதற்கு விமானப்படை முடிவு செய்யும் பட்சத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்