1971-ம் ஆண்டு நடைபெற்ற போர் வெற்றியின் பொன்விழா: வெற்றி சுடருக்கு மரியாதை
1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் மேக்கதோட்டி சுச்சரிதா மற்றும் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர்சிங் ஆகியோரால் இன்று (செப் 3) விசாகப்பட்டினம் கடற்கரையில் உள்ள கடல் வெற்றி போர் நினைவு சின்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன் விழா வெற்றி சுடருக்கு மரியாதை செய்யப்பட்டது.
1971 போரில் பங்கேற்ற முன்னாள் கடற்படை வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஆந்திர அரசின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
உள்துறை அமைச்சர் மற்றும் தளபதி மலர்வளையம் வைத்ததை தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியது. நாட்டின் சேவையில் தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் நினைவாக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய கடற்படையின் அணிவகுப்பு மரியாதையுடன் வெற்றி சுடர் கொண்டுவரப்பட்டது. பின்னர், 1971 போரில் பங்கேற்ற முன்னாள் கடற்படை வீரர்களுடன் அமைச்சர் மற்றும் தளபதி உரையாடியபோது அவர்களது அனுபவங்களை வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.
மாநகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ள இந்த வெற்றி சுடர், பின்னர் ராஜமுந்திரி, விஜயவாடா, நலகொண்டா ஆகிய நகரங்களை கடந்து ஹைதராபாத்தை சென்றடையும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2021 டிசம்பர் 16 அன்று வெற்றி சுடர்கள் புதுதில்லியை சென்றடையும். பின்னர் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu