தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி

தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி
X
தெலுங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது

ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்த முதல் நபர், கடந்த 14-ம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டார். இதேபோல், வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 2 பேருக்கு இந்த நோய் தொற்றால் பாதித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லியிலும் ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அதனைத்தொடர்ந்து அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ஒருவருக்கு முதல் முறையாக குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 40 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதன்மூலம், இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture