லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
உச்ச நீதிமன்றம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடைபெற்ற தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் அஜய் குமாரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது ஆஷிஷ் குமார் தனது காரை ஏற்றி தாக்குதல் நடத்தியதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இவர்களுடன் பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநிலங்களவை உறுப்பினர் தீபேந்தர் ஹூடா ஆகியோரும் உடனிருந்தனர்.
லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி சூரிய காந்த், ஹிமா கோலி ஆகியோரின் அமர்வு இன்று வழக்கை விசாரிக்கவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu