370-வது பிரிவை ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர்
பிரதமர் மோடி (கோப்பு படம்)
370-வது பிரிவை ரத்து செய்தது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தின் முடிவை அரசியலமைப்பு ரீதியாக இது நிலை நாட்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்துப் போற்றும் ஒற்றுமையின் அம்சத்தை நீதிமன்றம் அதன் திறன்மிக்க ஞானத்தால் வலுப்படுத்தியுள்ளது என்றும் மோடி கூறினார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தள பதிவில், 370 வது பிரிவை ரத்து செய்தது குறித்த இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது, 2019 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் மேற்கொண்ட முடிவை இது அரசியலமைப்பு ரீதியாக நிலைநாட்டுகிறது.
இது ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள நமது சகோதரிகள், சகோதரர்களுக்கு நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் மகத்தான பிரகடனமாகும். இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்துப் போற்றும் ஒற்றுமையின் அம்சத்தை நீதிமன்றம் தனது திறன்மிக்க ஞானத்தால் வலுப்படுத்தியுள்ளது.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்று ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன். முன்னேற்றத்தின் பலன்கள் உங்களைச் சென்றடைவது மட்டுமல்லாமல், 370-வது பிரிவால் பாதிக்கப்பட்ட நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை பிரிவினருக்கு அவர்களின் நன்மைகளை விரிவுபடுத்துவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 370-வது சட்டப்பிரிவின் கொடுமையை அனுபவித்த எவரும் இந்த உரிமையை இழக்க அனுமதிக்கக்கூடாது.
இன்றையத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலுவான, மிகவும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகவும் உள்ளது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் இந்நாளில் அவரது ராஜீய நடவடிக்கை மற்றும் ஆழமான அறிவார்ந்த செயல் நமது தேசத்தை சிறப்பாக, வலுவாகக் கட்டமைத்தது என்பதை நினைவுகூர்கிறேன். அவரது நுண்ணறிவுகளின், தலைமைத்துவமும் விலைமதிப்பற்றவை, தனிப்பட்ட முறையில், எங்களின் தொடர்புகள் எப்போதும் செழுமையானதாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பும், ஞானமும் முன்னேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu