பள்ளிகளில் சிசிடிவி கேமரா: உச்சநீதிமன்றம் அறிவுரை

பள்ளிகளில் சிசிடிவி கேமரா: உச்சநீதிமன்றம் அறிவுரை
X

மாதிரி படம் 

பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிகைகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் , அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இது குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்