முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையில்லை:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
X
மே 21ல் நடைபெற இருக்கும் நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வருகிற மே 21 ம் தேதி நீட் முதுகலை தேர்வு நடைபெற உள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் இத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும் என்பதால், நீட் முதுநிலை தெரிவை ஒத்தி வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையத்தளங்களில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!