மேம்படுத்தப்பட்ட 'பிரம்மோஸ் ஏர்' ஏவுகணை சோதனை வெற்றி
சுகாய் (Su-30MKI) போர் விமானத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏர் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுகாய் (Su-30MKI) போர் விமானத்திலிருந்து மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏர் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. திட்டமிட்டபடி ஏவுகணை வங்காள விரிகுடா பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நேரடியாக தாக்கியது.
மேம்படுத்தப்பட்ட இந்த பிரம்மோஸ் ஏவுகணையின் வரம்பு 290 லிருந்து சுமார் 350 கிமீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுகாய் (Su-30MKI) விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் முதல் ஏவுதல் இதுவாகும். இதன் மூலம், எஸ்யூ-30எம்கேஐ விமானத்திலிருந்து நிலம்/கடல் இலக்குக்கு எதிராக மிக நீண்ட தூரங்களில் துல்லியமான தாக்குதல்களை நடத்தும் திறனை இந்திய விமானப்படை அடைந்துள்ளது.
இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, DRDO, BAPL மற்றும் HAL ஆகியவற்றின் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் இந்த சாதனையை அடைய தேசத்தின் திறனை நிரூபித்துள்ளன. Su-30MKI விமானத்தின் உயர் செயல்திறனுடன் இணைந்த ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட வீச்சு திறன் இந்திய விமானப்படைக்கு போர்த் திறன் வாய்ந்த அணுகலை அளிக்கிறது. மேலும் எதிர்கால போர்க்களங்களில் ஆதிக்கம் செலுத்தவும் வகை செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu