50 மாணவிகளுடன் தனி ஒருவனாக தேர்வெழுத சென்ற மாணவன் மயக்கம்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவன்.
பீகார் ஷெரீப்பின் அல்லாமா இக்பால் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவன் "பதட்டத்தால்" மயங்கி விழுந்துள்ளார். இடைநிலைத் தேர்வு எழுத சென்ற மணிசங்கர் அவர் தேர்வறையின் உள்ளே சென்றதும், தேர்வறையில் 50 மாணவிகள் தேர்வுக்காக அமர்ந்திருப்பதையும் இவர் மட்டுமே அங்கு மாணவன் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் 50 பெண்களுடன் சேர்ந்து இடைநிலைத் தேர்வை எழுதப் போவதை உணர்ந்தால் சிறுவனுக்குக் காய்ச்சல் ஏற்படும அளவுக்கு பதற்றமடைந்துள்ளான். இதனால் சற்று நேரத்தில் மயக்கமடைந்து விழவே பள்ளி நிர்வாகம் மாணவனை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து மாணவனின் உறவினர் கூறுகையில், தேர்வு மையத்திற்குச் சென்று, அறை முழுவதும் மாணவிகள் இருப்பதைக் கண்ட மாணவன் பதற்றமடைந்து, காய்ச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்." என தெரிவித்துள்ளார். மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சீரான நிலையில் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu