இந்தியாவில் அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள்
![இந்தியாவில் அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள் இந்தியாவில் அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள்](https://www.nativenews.in/h-upload/2024/04/19/1892774-natta.webp)
அழிவின் விளிம்பில் நட்சத்திர ஆமைகள் இருக்கின்றன. மனிதனின் வசதிக்காக இயற்கை வளங்கள் பல அழிக்கப்பட்டதால் ஏராளமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
குறிப்பாக ஜியோ செலோன் எலிகன்ஸ் என்ற உயிரியல் பெயரில் அழைக்கப்படும் நட்சத்திர ஆமைகள் இந்தியாவில் அதிகம் அழியும் நிலையில் உள்ளன.
இந்திய வகை நட்சத்திர ஆமைகளுக்கு கட்டுப்பட்டி ஆமை என்ற பெயரும் உண்டு. இவை இந்தியா ,பாகிஸ்தான் ,இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள புதர் காடுகள் மற்றும் நிலப் பகுதிகளில் காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகளின் முதன்மை உணவானது இலைகள், புற்கள் போன்றவை. இவற்றின் ஆயுட்காலம் 30 முதல் 35 ஆண்டுகள் நட்சத்திர ஆமைகளின் மேல் ஓடு அமைப்பானது அவற்றுக்கு வித்தியாசமான அழகை தருகிறது. குறிப்பாக அதன் மையத்தில் உள்ள மஞ்சள் புள்ளிகளில் இருந்து ஆறு முதல் 12 மஞ்சள் கோடுகள் காணப்படுகின்றன.
நட்சத்திர ஆமைகளை பளிச்சென்ற வெளிச்சம் உள்ள பகுதிகளில் அவற்றை அடையாளம் காண இயலாது. தாவர புதர்களில் மறைந்திருக்கும் போது எளிதாக கண்டறிய முடியாது. அழகான பளபளப்பான மேல் ஓட்டுடன் கூடிய இதன் அழகிய தோற்றத்திற்காக வெளிநாடுகளில் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். இவை இருக்கும் இடங்களில் செல்வ வளம் பெருகும் என்ற நம்பிக்கையால் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த ஆமைகளை வாங்குகிறார்கள்.
சில மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் மருந்து தயாரிப்புக்காக வாங்கப்படுவதும் சர்வதேச சந்தையில் நல்ல விலைக்கு போவதால் கடத்தப்படுகின்றன. எனவே அழியும் நிலையில் உள்ள இயற்கையின் சமநிலையை காக்க பல்வேறு வகையான உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எது அழிந்தாலும் உயிரின சங்கிலி அறுபட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை. எனவே நட்சத்திர ஆமைகளை கடத்தலில் இருந்தும் அழிவில் இருந்தும் காப்பது நமது அனைவரின் கடமையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu